Word Tips

579

 1,619 total views

Word Text-ல் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட அழுத்தமாக (Bold), அடிக்கோடு(Underlined), சாய்வு (Italic) மற்றும் வேறு சில format-களில் அவற்றை அமைத்திருப்போம்.

இவ்வாறு அமைத்த பின்னர் இந்த formatting தேவை இல்லை என எண்ணினால் இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால் இதனை select  செய்து Menu bar சென்று ஒவ்வொரு iconஆக click செய்வோம்.

இதற்குப் பதிலாக இரண்டு shortcut key-களைப் பயன்படுத்தலாம். Formatting நீக்கி எளிமையான text மட்டுமே தேவைப்படும் சொற்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். பின் Ctrl+Shift+Z அழுத்துங்கள். மொத்தமாக formatting அனைத்தும் நீக்கப்படும். Word உள்ளாக ResetChar என்ற கட்டளையை அமல்படுத்துகிறது. இதனை Ctrl+Space Bar அழுத்தியும் மேற்கொள்ளலாம்.

இதே போல ஏதேனும் Paragraph formatting செய்திருந்தால் அந்த format  நீக்க பாராவினை select செய்து Ctrl+Q அழுத்துங்கள்.

Text ஒன்றுக்கு சாதாரண normal style இருந்தால் போதும் என்று எண்ணினால் உடனே அதனைத் தெரிவு செய்து Ctrl+Shift+N அழுத்தவும்.

You might also like

Comments are closed.