Windows 7ன் இயங்குதளத்தில் மீடியா பிளேயர்!

568

 1,248 total views

Windows சிஸ்டத்துடன் Windows Media Player நமக்குத் தரப்படும் சாதனமாகும். கணினி உபயோகப்படுத்தும் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் மென்பொருள் இதுவாகும்.

ஆனால் இதுவரை Windows XP சிஸ்டத்தில் நமக்குக் கிடைத்து வந்த Windows Media Player-க்கும், தற்போது Windows 7 சிஸ்டத்துடன் கிடைக்கும் Media Player-க்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

இதனால் Windows XP -யிலிருந்து Windows 7 இயங்குதளத்திற்கு மாறும் பலர் புதிய அமைப்பினால் தடுமாறுகிறார்கள். அதில் முக்கியமான சில இயக்கங்களை இங்கு காணலாம்.

Windows 7 சிஸ்டத்தில் இயங்குபவர்கள் முதலில் Windows Media Playerஐ இயக்கவும். Recommended Settings என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்த பின்னர் Finish என்பதில் click செய்திடவும். இதில் option கிடைக்கும்.

ஆனால் அது இதில் அதிகம் அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே. அடுத்து Music Player சில sample music கோப்புடன் திறக்கப்படும். CD வழி பாடல் கேட்க CDஐ அதன் Tray-ல் வைத்திடவும்.

Windows Music Player தானாகவே அதில் உள்ள இசை கோப்பை அடையாளம் கண்டு இசைக்கத் தொடங்கும். பின்னர Ctrl  பட்டன்களுடன் ஒலியின் அளவு இயக்கும் விதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

அப்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆல்பம் அல்லது பாடலைக் காண கீழாக வலது பக்கம் உள்ள iconஐ click செய்திட வேண்டும்.

பாடலை இயக்குகையில் CDஐ Music Player Libraryயில் கொண்டு செல்ல, வலது பக்கம் உள்ள CD அடையாளத்தில் click செய்தால் போதும்.

இதில் சிறப்பு என்னவென்றால் CD இயக்கப்படும் போதே இதனை மேற்கொள்ளலாம். இந்த ரிப்பிங் செயல்பாடு முடிந்தவுடன் ஆல்பம் libraryயில் பட்டியலிடப்படும்.

CDஐ உருவாக்க அங்கு தரப்பட்டுள்ள Burn Tabஐ தேர்ந்தெடுத்து, நீங்கள் விருப்பப்படும் பாடல்களை இழுத்துவிட்டால் போதும்.

You might also like

Comments are closed.