“வாட்ஸ் அப் கோல்ட்” பற்றிய குறுந்தகவளின் பின்னனி:

அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாட்ஸ் அப் குறுந்தகவல் செய்தியில் சில  நாட்களாகவே  பயனார்களுக்கு வாட்ஸ் அப் கோல்ட் எனப்படுகின்ற புதிய பதிப்பை இன்ஸ்டால் செய்து கொள்ளும்படி தகவல்கள்  வெளியாயின. கீழ்கண்டவாறு தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. “வாட்ஸ் அப் கோல்ட்  என்பது இதுவரை  பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஒரு தளமாகும். இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது . இதன் மூலம்  வாட்ஸ் அப் கோல்டில் தவறுதலாக நீங்கள் அனுப்பும் தகவல்களை “Delete” செய்து கொள்ளவும் , இலவச வீடியோ காலிங் செய்து கொள்ளவும் முடியும் , மற்றும் ஒரு நேரத்தில் 100 புகைப்படங்களை  அனுப்பிக் கொள்ளவும் முடியும்.
 இது போன்ற வசதிகளை பெற்றுக் கொள்ள கீழ்கண்ட வலைதளத்தினை அணுகவும்” – இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
watsapp-gold-message
ஆனால் இங்கே குறிப்பிடப்பட்டிருந்த தளம் முற்றிலும் பொய்யானது.

மேலும் இது வாட்ஸ் ஆப் குழுவினரால் அனுப்பப்பட்டதல்ல என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

இது இணைய திருடர்களான  ஹேக்கர்களின் வேளையே! மேலும் இவ்வாறு செய்வதனால் பயனர்களின்  தனிப்பட்ட தரவுகள் திருட்டு போக வாய்ப்புண்டு. ஆகையால் இது போன்ற செய்திகள் உங்கள் போனில் வந்தால் அதனை இன்ஸ்டால் செய்யாமல் இருப்பது நல்லதே!!

Related Posts

Leave a Reply