ஆப்பிள் டி.வீயில் வீ.எல்.சீ பிளேயர்!!!

பலதுறைகளில் பங்களித்துக் கொண்டிருக்கும் வீடியோ பிளேயரான   வி.எல்.சி. பிளேயர்,  தற்போது ஆப்பிள்  டி.வீ யில் வரவுள்ளது.  இதுவரை கணினி , ஐபோன் மற்றும் ஐபேடுகளில்  கண்டு வந்த இந்த செயலியை தற்போது புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு  ஆப்பிள் தொலைக்காட்சியில்  இடம் பெற்றுள்ளது. இதில் கீழ்க்காணும் வசதிகள் புதியனவாக இடம் பெற்றுள்ளன.
remote-playback-web-interface
  •  அனைத்து வகையான பைல்களையும் இதில் இயக்கலாம்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட பல ஆடியோ ட்ரேக்குகளை இதில் இயக்கலாம்.
  • இணைய ரேடியோ சேவைகளுக்கும்  ஆதரவளிக்கும்.
  • இது முற்றிலும் இலவசம் மற்றும் ஓப்பன் சோர்ஸ் தன்மை கொண்டது.
  • இதன் மூலம் இணையத்தின் URL-களை நேரடியாகவே பேஸ்ட் செய்து  பிடித்த பாடல்களை கேட்டு மகிழலாம்.
  • ஆப்பிள் டீ.வீயில் உங்கள் இணையத்திலிருந்தோ   அல்லது நேரடியாகவோ பைல்களை அனுப்பிக் கொள்ளாலாம்.மேலும்  UPnP, Windows shares (SMB), FTP and Plex servers போன்றவற்றின் பைல்களுக்கும் ஆதரவளிக்கும். மேலும் இவற்றிலிருந்து நேரடியாகவே சப் டைட்டில்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

images (1)

                       முதல் முறையாக  வீ.எல்.சீ  OpenSubtitles.org  உடன் ஓருங்கினைக்கிறது. இதன்  மூலம் பயனர்கள் பின்னை இசையின் போது  காணாமல் போன சப்டைட்டில்களை  பெற முடியும். இந்த சப்டைட்டில்கள் அரேபிக் மற்றும் ஹூப்று போன்ற சிக்கலான  மொழிகளுக்கு வழங்கப்பட உள்ளது.நவம்பரில் இந்த  நுட்பம் பீட்டா  பரிசோதனையாளர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது. தற்போது இதனை வெற்றிகரமாக வெளியிட தயாராக்கி வருகிறது. சாதரணமான கணினியில் வீ.எல்.சீ மீடியா பிளேயர்களை பயன்படுத்தும் போது  டிராக் மற்றும் டிராப் செய்து கொள்ளலாம். தொலைக்காட்யில் பயனர்களின் வசதிக்கிணங்க மேலும்     டிராப் பாக்ஸ்,ஒன்  டிரைவ்  போன்றவற்றையும் நுழைக்கும்  முயற்சியில் வீடியோ லேன் நிறுவனம்  ஈடுபட்டு வருகிறது.வீ.எல்.சீ பிளேயரின்  உதவி கொண்டு பல கல்வி சமந்தப்பட்ட உள்ளடக்கங்கள் மற்றும் பல பேச்சுவார்த்தை சமந்தப்பட்ட நிகழ்ச்சிகளை  கண்டு மகிழலாம்.  மேலும் இது வீடியோ பின்னணி செயல்பாடுகளில் தொலைக்காட்சிகளில் அறிமுகபடுத்தப்பட்டது இதுவே  முதல் முறையாகும். இந்த அறிமுகம் பயனர்களிடையே அதிக வரவேற்பை  பெற்றால்  தொடந்து  இதுபோன்ற பல செயலிகளை ஆப்பிள் டி.வீகளில் காணலாம்.

Leave a Reply