வாங்க கொஞ்சம் வன்பொருளப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் – ஆர்டுயீனோ

950

 1,538 total views

ஆர்டுயீனோ என்பது ஒரு திறந்த மூலநுண்கட்டுப்படுத்தி(Microcontroller). நுண்கட்டுப்படுத்தி அல்லது µC என்றும் அழைக்கப்படுகிறது. இதில் எளிமையான CPU, டைமர்கள், I/O போர்ட்டுகள் மற்றும் நினைவகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒற்றை ஒருங்கிணை சுற்றமைப்பு கொண்ட சிறிய கணினி ஆகும்.இது  நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் தொலைகாட்சி முதல் வாஷிங் மஷின் வரை அணைத்திலும் இதன் பயன்பாடு தொடர்கிறது. ஆர்டுயீனோ என்ற எளிமையான திறந்த மூல தளம் கொண்டு உள்ளீடுகளை (inputs) படிக்க – ஒரு சென்சாரைகொண்டு அசைவுகள்,வெப்ப அளவு அல்லது ஒரு ட்விட்டர் செய்தியை படித்து அதற்கு ஏற்ப வெளியீடுகளை (outputs) கொடுக்கின்றது. ஆர்டுயீனோIDE(Integrated Development Environment)மென்பொருள் முலம் வழிமுறைகளை(Instructions) கொண்டு செயல்படுகிறது(Processing).

ஆர்டுயீனோIDE

ஆர்டுயீனோ பல்லாயிரக்கணக்கான திட்டங்களுக்கு உதவி இருக்கிறது. இதில் அன்றாட பயன்பாடு முதல் ஆராய்ச்சி வரை அடங்கும். மாணவர்கள்,  கலைஞர்கள், புரோகிராமர்கள், மற்றும் தொழில் தயாரிப்பாளர்கள்  என ஒரு உலகளாவிய சமூகமாக சேர்ந்து திறந்த மூல மேடையின் கிழ் திறமைகளை வெளிபடுத்தியும், பகிர்ந்தும் பயணித்து வருகின்றனர்.

ஆர்டுயீனோ என்ற எளிமையான கருவியை  the Ivrea Interaction Design Institute உருவாக்கியது. இதனை கொண்டு மாணவர்கள் எவ்வித மின்னணு மற்றும் நிரலாக்க பின்னணி இல்லாமல் பயன்பாடுகளை உருவாக்க இயலும். ஆர்டுயீனோவின் உதவி கொண்டு  real time projects பலவற்றை உருவாக்கு வருகின்றனர்.இதில் குறிபிடத்தக்க சில lOT applications, 3D Printing…..

arduino-extra-core

தனிபண்புகள்

  • பல்வேறு தளங்களில் இயங்கும் (எ-கா விண்டோஸ், லினக்ஸ், மாக்)
  • செலவில்லா பயன்பாடு
  • எளிய மற்றும் தெளிவான நிரலாக்க மொழியுடன் கூடிய மென்பொருள், வன்பொருளை கொண்டு உள்ளது.

மேலும் விபரங்களுக்கு

https://www.arduino.cc/

https://learn.sparkfun.com/tutorials/what-is-an-arduino

 

சி. சிந்துஜா சுந்தராஜ்,

ஆசிரியர்,
கட்டற்ற மென்பொருள் வன்பொருள் இயக்கம்
புதுச்சேரி

 

 

 

 

You might also like

Comments are closed.