கூகுளின் who’s down :

கூகுளின்  இந்த புதிய பயன்பாட்டில் ஒய்வு  நேரத்தை ‘who down ‘ னுடன்  செலவிடுங்கள் . இந்த  ‘who’s  down’ உதவியால்  நீங்கள்  வார இறுதியில் தனிமையாக இருப்பதாக உணர்குறீர்களா ? சாதரணமாக  உங்களுக்கு உதவும் சமூக வலை தளங்களும்   சளைத்து விட்டனவா ? இவையனைத்திற்குமே  கூகுல் அதன் புது பயன்பாடு ஒன்றினை அறிமுகபடுத்தி பதிலளிக்க உள்ளது.

Screen-Shot-2015-10-30-at-3.37.05-PM

இந்த பயன்பாட்டின் மூலம் யாரெல்லாம் உங்களுடன் அரட்டை அடிக்க தயாராக இருக்கிறார்களோ அவர்களை மட்டும் காட்டும் விதமாக “who ‘s  Down  ” அருமையான பயன்பாட்டை அறிமுகபடுத்த தயாராக உள்ளது.

கூகுளில் இந்த பயன்பாட்டால் நீங்கள் ஒரு ஸ்லைடரால் உங்கள் நண்பருடன் பேச தயாராக உள்ளதை தெரிவிக்கலாம். பேசத் தொடங்கியதிலிருந்து  நீங்கள்  3 மணி நேரத்திற்கு மட்டுமே நண்பர்களுடன் உரையாடலாம். பின் இந்த பயன்பாடு உங்களிடம் சில கோரிக்கைகளை விடுக்கும் அதாவது சாப்பிட செல்லலாமா?   அல்லது   வெளியே   செலலாமா? போன்ற கேள்விகளைக் கேட்கும் ?

இந்த பயன்பாட்டில் உங்கள் நண்பர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் அவர்களின் விடுமுறை திட்டங்களிலும் கலந்து கொள்ளலாம் .இதனால் முகநூலோ வாட்ஸ் அப்போ , ஸ்நாப்சாட்டோ உங்கள் நண்பர்களுடன் வார விடுமுறையை கழிக்கும் வகையில் அனுமதிக்கவில்லை என்றால் who ‘s down உங்களுக்கு கண்டிப்பாக கை கொடுக்கும் .இந்த பயன்பாடு தற்போது அன்றாய்டு மற்றும் ios களில் கிடைக்கிறது. ஆனால் தற்போது குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட அழைப்புகளிற்கு மட்டுமே அனுமதிக்கும்படி செய்துள்ளது.  Desktop

ஆகையால் நீங்கள் எங்கிருந்தாலும் ஒரே ஒரு ஸ்லைடில் உங்கள் நண்பருடன் அரட்டை அடிக்கத் தொடங்குங்கள் . இது இளம் வயதினரிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது. கூகுல் இந்த பயன்பாட்டை முக்கியமாக மாணவர்களை குறிவைத்தே இந்த பயன்பாட்டை துவக்கியுள்ளது . 2004 -ல் முகநூல் செய்ததுபோலவே இதனை தொடங்குவதற்கு முன் பயனர்கள் அவர்களின் பள்ளியின் பெயர்கள் அல்லது கல்லூரியின் பெயர்களையோ கொடுத்து அழைப்புகளை விடுக்க தொடங்கலாம் . இந்த பயன்பாடு கூகுள் மற்றும் ஆப்பிளின் இரண்டு கடைகளில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது .

கூகுள் இந்த மாதிரியான சமூக வலைதளங்களில் உலவ விடும் பயன்பாடுகளை பலவற்றை வெளியிட்டு சலித்து விட்டது. இதற்கு முன் கொண்டு வந்த கூகுள் பிளஸ் சரியான வரவேற்பை பெறவில்லை என்பதால் இந்த பயன்பாட்டை சிறிய பயத்துடனே களமிறக்க உள்ளனர் .இந்த கூகுளின் புது பயன்பாடு நண்பர்களின் வட்டாரங்களுக்கிடையே ஒரு புதிய ரசனையைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘who’s down ‘  வாட்ஸ் அப், டுவிட்டர் போன்ற பயன்பாடுகளையும் மீறி வெற்றியைக் கடந்தால் கூகுள் இது போன்ற பயன்பாடுகளை தொடர்ந்து வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply