இந்தியாவில் கால் பதித்துள்ள நெட்பிலிக்ஸ் !

                    நெட்பிலிக்ஸ் என்பது  உலகிலேயே மிகச் சிறந்த  இணையதள  வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையாகும். நெட்பிலிக்ஸ்  மூலம் பயனர்கள்  ஸ்மார்ட் போனை டீ .வீ களில் இணைத்து விருப்பட்ட காட்சிகளைக் காண முடியும். அதாவது இணையத்தை நம் வீட்டின் தொலைகாட்சியில் கொண்டு வரும் ஒரு சாதனமே.இதுவரை  அமெரிக்கா மற்றும் யுரோப் போன்ற நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு  வந்தது. இந்த சேவை  சீனாவைத் தவிர்த்து  உலகளாவிய முறையில் சுவிட்சர்லாந்து ,ஆஸ்திரியா ,பிரான்ஸ், ஜெர்மனி போன்ற   50 நாடுகளுக்கும் மேலாக  அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் தற்போது இந்த நெட்பிலிக்ஸ்  சேவையை இந்தியாவில் காலடி பதித்துள்ளது.  மாதம் ரூ.500 செலுத்தி  விருப்பட்ட இணைய சேவைகளை  பெற முடியும். கீழ்க்கண்ட அட்டவணையின் மூலம் அதன்  திட்டங்கள் விவரிக்கப்படுள்ளன.
  உண்மையில் இது ஒரு மகிழ்ச்சிகரமான சேவையே!  ஏனெனில் இது  போன்ற சேவையால் புதிதாக  வெளிவந்த திரைப்படங்கள்  மற்றும் பழைய திரைப்படங்கள் , நாடகங்கள் , டி.வீ தொடர்கள் போன்றவற்றை  காணலாம். ஒரு நாள் தொடர்களை பார்க்க தவறி விட்டாலும் அவற்றை நெட்பிலிக்ஸ் உடனடியாக தந்து  விடும்.  இதில் குறிப்பிடத்தக்க ஒரு பெரிய குறை என்னவென்றால் இந்தியாவில்  பெங்களூர் , டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களைத்  தவிர இன்றும் பல நகரங்களில் இருக்கும் குறைவான இணைய சேவை போன்றவைகள்  நெட்பிலிக்ஸ்ஸின் சேவைக்கு ஒரு பெரிய சவலாக அமைய வாய்ப்புள்ளது.  நெட்பிலிக்ஸ்ஸின்  இந்த சேவைக்கு அமெரிக்காவில்  நிர்ணயித்துள்ள சேவையைப்  போலவே  இந்தியாவிலும் ரூ.500 என்ற மாதக் கட்டணத்தினை  நிர்ணயித்துள்ளனர். மேலும் ஒரு முறை  நெட்பிலிக்ஸ்ல் நுழைவதற்கு முன்  உங்களது கார்டின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் . மேலும் நீங்கள் 18 வயதிற்கு மேலுள்ளவரா என்பதையும் தெரிவிக்க வேண்டும் ஏனெனில்  நெட்பில்க்ஸ்ஸில்  அதன் சேவையை 18 வயதிற்கு கீழுள்ளவர்களுக்கென தனியாக சென்சார் சேவைகளை  வழங்கவிருக்கிறது.நெட்பிலிக்ஸ்  இந்த சேவையை  ஆரம்பகட்டமாக இலவசமாக  வழங்கவுள்ளது. அதன் பின் நிர்ணயித்துள்ள கட்டணங்கள்  வசூலிக்கப்படும்.

Leave a Reply