Microsoftன் Anti-Virus இலவச மென்பொருள்

0 3

இன்றைய சூழலில் கணினியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும் போதோ, ஏதேனும் download செய்யும் போதோ, அல்லது usb drive மூலமாகவோ நம்மை அறியாமலே virus கணினியில் புகுந்து கணினியில் வைத்திருக்கும் முக்கியமான dataகளை அழிப்பதுடன் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது.

Virusகளில் இருந்து கணினிகளை பாதுகாக்க பல Anti-Virus மென்பொருட்கள் உள்ளது. இந்த வரிசையில் பிரபல கணினி நிறுவனமான Microsoft புதிய இலவச மென்பொருளை வெளியிட்டுள்ளது. Microsoft Security Essential என்ற மென்பொருள் இப்பொழுது புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

  • இந்த மென்பொருள் முழுக்க முழுக்க இலவச மென்பொருளாகும்.
  • கணினியில் உள்ள virusகள், malwareகளை கண்டறிந்து அழிக்கிறது.
  • கணினியை scan செய்ய மூன்று வகையான வசதிகளை (Quick Scan, Full Scan, Custom Scan) கொண்டுள்ளது

மென்பொருளை உபயோகிக்க கணினியின் அடிப்படை தேவைகள்:

  • Windows இயங்கு தளத்தின் original பதிப்பை உபயோகிப்பது அவசியம்.
  • Windows XP(SP3), Vista, Windows 7 போன்ற கணினிகளில் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.
  • XP என்றால் CPU Speed 500MHz அதிகமாகவும், 256MB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.
  • Vista மட்டும் Windows 7 ல் CPU Speed 1.0GHz அதிகமாகவும், 1GB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.
  • கணினி VGA Display 800 X 600 க்கு அதிகமாக இருக்க வேண்டும்.
  • 200MB கணினியில் காலி இடம் இருக்க வேண்டும்.
  • மென்பொருளை install செய்யும் பொழுது கணினியில் internet வசதி இருப்பது அவசியம்.

மென்பொருளை டவுன்லோட் செய்ய  :       http://windows.microsoft.com/en-US/windows/products/security-essentials

You might also like

Leave A Reply