காந்த சக்தி கொண்ட வயர்லஸ் சார்ஜர்கள்!!

இதற்கு முன் பலவிதமான  சார்ஜ்  ஏற்றும் மின் கலன்களையும்  சக்தி வாய்ந்த பவர் பேட்டரிகளையும் பற்றி அறிந்திருப்போம். ஆனால்   ஒரு சிறிய சிப்புகளின் (chip )மூலமாக எப்படி சார்ஜ் ஏற்றிக் கொள்வது ? ஆம் ,  ஜிக்கோவின் வயர்லஸ் சார்ஜரினை    மொபைல் சாதனங்களில்  செலுத்துவதன் மூலம்  உங்கள் ஸ்மார்ட் போன்கள்  மற்றும் ஐபோன்களில்  சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். இதனால்  ஒருவர் மொபைல் சாதனத்தினை   சார்ஜ் ஏற்றும் நேரத்திலும்  உபயோகபடுத்திக் கொள்ளலாம்.இதிலுள்ள காந்த சக்தியினால்  இந்த சாதனம் சரியாக  மொபைலுடன் சரியாக  பொருத்தபடுகிறது. ஒரு சிறிய சிப் போன்ற இந்த சாதனத்தினை மொபைலில் செலுத்தி எந்தவித கேபிளின் உதவியுமின்றியும்    தேவையான மின் திறன்களைப் பெறலாம். இந்த சிப்பினை மொபைலில்  செலுத்துவதும் நீக்குவதும் மிகச் சுலபமே. இந்த மைக்ரோ கனெக்டரின்  மூலம் கேபிள்களில் சிக்கிக் கொள்ளாமல்  சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். மேலும் எளிதில் எங்கும் சுமந்து செல்லக் கூடிய அளவிற்கு இலகுவானது.

 

Leave a Reply