GMailல் Google+ Chatஐ Disable செய்வது எப்படி?

793

 1,660 total views

Facebook தளத்தை விட உபயோகிப்பதற்கு எளிமையாகவும், வசதிகளையும் Google + தளம் கொண்டுள்ளது. Google + வட்டத்தில் உள்ள நண்பர்களிடம் Chat செய்யும் வசதியை Google அறிமுகப்படுத்தியது. அந்த வசதியின் மூலம் Google + வட்டத்தில் உள்ள அனைத்து நண்பர்களிடமும் G Mailல் இருந்தே அரட்டை அடித்து மகிழலாம். ஆனால் Google +ல் உள்ள அனைத்து நண்பர்களும் உங்கள் G Mailல் chat listல் வந்துவிடுவது பிரச்சினையாக உள்ளது என்றும் G Mailல் நுழைந்தாலே பெரும்பாலானவர்கள் chat செய்வதால் அவர்களுக்கு பதில் கூற முடியாமல் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாவதாக எண்ணுவதாலும் அதனை disable செய்ய எண்ணுவார்கள். ஆகவே இந்த வசதியை எப்படி ஜிமெயிலில் இருந்து நீக்குவது எனப் பார்ப்போம்.

* இதற்க்கு முதலில் Google + தளத்திற்கு செல்லுங்கள்.
* அங்கு Chat பகுதிக்கு சென்று அங்கு உள்ள ஒரு சிறிய அம்பு குறியை click செய்யவும்.
* உங்களுக்கு ஒரு சிறிய menu உண்டாகும். அதில் உள்ள Privacy Settings என்ற வசதியை click செய்யவும்.

  • Privacy Settings கொடுத்தவுடன் உங்களுக்கு இன்னொரு window open ஆகும்.
  • அதில் Choose who can chat with you என்ற இடத்தில் உள்ள your circles என்பதை click செய்து Custom என்பதைத் தேர்வு செய்து கொள்ளவும்.
  • Google +ல்  நீங்கள் உருவாக்கி வைத்துள்ள Circles காணப்படும்.
  • அதற்கு நேராக ஒரு சிறிய கட்டங்களில் Tick mark குறி காணப்படும்.
  • அதில் அனைத்து குறிகளையும் நீக்கி விட்டால் Google +ல் வட்டத்தில்  உள்ள நண்பர்கள் உங்கள் GMail Chat listல் இருந்து நீக்கப்படுவார்கள்.

  • குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள நண்பர்கள் மட்டும் chat செய்ய வேண்டுமென்றால் அந்த வட்டத்தை Tick mark செய்து கொள்ளுங்கள்.
  • கடைசியில் கீழே உள்ள Save button click செய்து விட்டு GMail வந்து chat list பாருங்கள் Google + நண்பர்கள் நீங்கி இருப்பார்கள்.
  • நீங்கள் Email மூலம் சேர்த்த நண்பர்கள் மட்டுமே Email Chat listல் இருப்பார்கள். ஒருவேளை நீங்கள் ஏதேனும் வட்டத்தைத் தேர்வு செய்து இருந்தால் அந்த நண்பர்களும் இருப்பார்கள்.
இந்த வசதியை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

You might also like

Comments are closed.