உங்கள் SMS -ஐ பேஸ்புக் மேசென்ஜெரில் பெற….

fb_660_061316103845_061716011432
அதிகளவு  பயனர்களைப்  பெற்றதும்,சமூக வலைதளத்தின் அரசனாகவும் விளங்கும்  பேஸ்புக் மேசென்ஜெர்  செயலியில்    புதியதொரு மாற்றமாய்  SMSகளையும்  பெறலாம்.  அப்படியானால் இனி பயனர்கள்  மேசென்ஜெர்  செயலியில் மேசென்ஜெர்  செயலியில் இருக்கும்போதே      தங்கள்  sms களை  பெறலாம்.  கூடவே  அதிலே  ரிப்ளையும்   செய்தும் கொள்ளலாம்.     இந்த அம்சம்  தற்போது ஆன்டிராய்டு பயனர்களுக்கு  மட்டுமே!  இதற்கு மெசேஞ்சரில்   Settings இல் சென்று sms  ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில்  “Default SMS app” ஆன் செய்ய வேண்டும்.எனவே பயனர் ஒருவர்  மெசேஞ்சரிலேயே கலந்துரையாடலாம்.    மேசென்ஜரில் செய்யும் கலந்துரையாடல் நீல நிறத்தில் இருக்கும்போது sms கள் பர்ப்பில் நிறத்தில்  இருக்கும். இதில் சாதாரண sms கள் மட்டுமல்லாமல்  புகைப்படங்கள், குரல் செய்திகள், வீடியோ கால்கள், ஸ்டிக்கர்கள், இருப்பிட பகிர்வு,GIF  போன்ற அனைத்தும் அனுப்பிக் கொள்ளலாம்.  இந்த செய்திகள் எதுவும் பேஸ்புக் சர்வரில் பதிவாகாது. வழக்கமான  sms ரிப்ளைகளுக்கு பெறப்படும் கட்டணமே இதற்கும் பொருந்தும்.   அதேபோன்றே  மேசென்ஜெரில் செய்யும் கலந்துரையாடலுக்கு வழக்கமான   டேட்டாக்கள்  வசூலிக்கப்படும்.  இதனால் ஒரு செய்தியை பெற்றவுடனே  வேறு எங்கும் செல்லாமல் அதே தளத்திலிருந்தபடியே ரிப்ளை செய்து கொள்ளலாம்.  ஆன்ட்ராய்டு போன் அறிமுகமான காலத்திலிருந்தே  பெரும்பாலும் SMS வழியிலேயே அரட்டைகளும் கலந்துரையாடல்களும் இருந்துகொண்டிருந்தன. காலம் செல்லச் செல்ல    குறுந்தகவல் செயலிகள் பல உண்டாகாத்  தொடங்கியதும்   பேஸ்புக் மெசேன்ஜர்,   வாட்ஸ்  அப், ஹைக்,  வீ சாட் , வைபர்,   ஸ்கைப் என இது போன்ற பல  செயலிகள்  தொடர்ந்து    வந்த வண்ணமே இருக்கின்றன. இந்த வரிசையில்  எதிர்காலத்தில் இலவச குறுந்தகவல் செயலிகளையும் எதிர்பார்ப்போம்.

Leave a Reply