Free Memory Improve Master – கணினியின் Memory அதிகரிக்கும் இலவச மென்பொருள்

நம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் RAM முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம்.  அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் memory அதிகமாக உபயோகப்படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு.

இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை programe ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் memory கட்டுப்படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்துக் கொள்ளும்.   இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய http://www.box.com/shared/05v35tvo0q

Download செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup file வந்திருக்கும். அதை இரண்டு முறை click செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
இதில் ஐந்து  வகையான பிரிவுகள்  நமக்கு தெரியும்.
  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings – என்ற பிரிவுகள் காணப்படும்.
Information Overview :
 இந்த button click செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதைப் போல window வரும்.
இந்தப் பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு memory உபயோகப்படுத்தப்படுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த window-வில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு memory காலியாக உள்ளது என்று அர்த்தம்.
Memory Optimization 
இந்தப் பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
  • இந்த window-வில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும். இவை இரண்டுமே நம் கணினியின் memory-ஐ கட்டுப்படுத்த உதவும் வசதிகளாகும்.
  • இதில் உள்ள Fast Free என்பதை click செய்தால் உங்களுக்கு கீழே ஒரு message window வரும்.
  • அதில் உங்களுடைய கணினி இதற்கு முன்னர் எவ்வளவு memory உபயோகித்தது, இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு memory-ஐ கட்டுப்படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.
 

  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் memory-ஐ கட்டுபடுத்தும்.
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள்.
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரி செய்வதர்க்கும், நம் கணினியில் எந்த file-கள் எவ்வளவு memory உபயோகித்துக் கொள்கிறது போன்ற தகவல்கள் கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயங்கும்.

Related Posts

Leave a Reply