பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் பட்டியலில் பொய்யான நண்பர்களை எப்படி கண்டறிவது?

என்னதான் பேச்புக்கின் பிரண்ட்ஸ் லிஸ்ட்டில்  உங்களுடன்  பலர் தொடர்பிலிருந்தாலும் அவர்கள்  யாவரும் உங்கள் உண்மையான நண்பர்கள் இல்லை.பேஸ்புக்கில் இருக்கும் உங்கள் நண்பர்களில் முக்கால்வாசி பேர் பொய்யானவர்களே!  என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது . மனிதவியல் ஆராய்ச்சி நிபுணர்கள்  நடத்திய சமீபத்திய ஆய்வின் படி   பேஸ்புக்கில் நாம் பழகும் நண்பர்கள்  அனைவரும் நேரில் பார்க்காதவர்களே அவர்களில் எத்தனை பேர்  உண்மையான  நண்பர்கள் எத்தனை பேர் உண்மையாகவே ஒரு நண்பருக்காக நினைத்து  கவலைப்படுகிறார்கள் என்ற ஆராய்ச்சியை  நடத்தியது.  சமூக வலைதள  நண்பர்களுக்கும் உண்மையில் நாம் நேரில் பார்த்து பழகும் நண்பர்களுக்கும் இருக்கும் வேறுபாட்டை இந்த கருத்துக் கணிப்பு வெளிக்கொண்டுவந்துள்ளது.   பிரிட்டனில் உள்ள  ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழக பேராசிரியர் ராபின் டன்பர் பேஸ்புக் நண்பர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டதில்  கிடைத்த தகவல்களின் படி   பேஸ்புக்கில் இருக்கும் 150  நண்பர்களில் 15 நண்பர்கள் மட்டுமே உங்களுக்கு தெரிந்த நண்பர்கள்  அதில் உங்களைப் பற்றி கவலைப்படுபவர்கள்  5 பேர் மட்டுமே!  மற்றும்  உங்கள் நண்பர் பட்டியலில் 27 சதவிகிதம் மட்டுமே உண்மையானவர்கள் என்ற தகவலை அளித்துள்ளார்.

மற்றவை எல்லாம் எதோ ஒரு வணிக நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட போலி கணக்குகள்.  இணையத்தில் ஒரு வணிக நிறுவனம் தங்களுக்கு இந்த நாட்டை சேர்ந்த 10 லட்சம் பேர் எங்கள் பக்கத்தை லைக் செய்யத் தேவை என ப்ராஜக்ட் கொடுப்பார்கள் அதன் படி இணைய மார்கட்டிங் நிறுவனங்கள் சில பிரத்யோக மென்பொருள் மூலம் ஆயிரகணக்கான ப்ரோபல்களை தினமும் உருவாக்கி அந்த புரொபைல் களுக்கு அதிக நண்பர்களை சேர்ப்பார்கள் அப்படி வரும் நட்பு அழைப்புகள் அமேரிக்கா, ஐரோப்பாவில் அதிகம்.
google image search
​ ஒரு பெண் புரொபைல் படம் வைத்து நட்பு அழைப்பு வந்தால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அந்த நபரின் புரொபைல் படத்தின் இட முகவரியை காப்பி செய்து google image search இல் தேடி அது உண்மையான படமா இல்லை வேறு நபரின் படமா என எளிதில் பார்த்துவிடலாம்​
ஆபாசமாக பேச, பிறரை திட்ட, ஏமாற்ற, கண்காணிக்க என ஒரு நபரே வேறு சில புரொபைல் வைப்பதும் வெகு பரவலாக இருக்கிறது. உங்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் முதலில் வருவோர் உங்கள் நிகழ் கால நண்பர்கள் மட்டுமே, நிழல்  உலக நண்பர்கள் ஒரு லைக் போட்டுவிட்டு போய்விடுவார்கள் என இந்த ஆய்வு சொல்கிறது.

அனால் இருக்கும் அந்த ஓரிரு உண்மையான நண்பர்களால் தான் சென்னை பெருவெள்ளத்தில் பல நிவாரண / மீட்பு பணிகள் முகநூல்  தமிழ்நாட்டில் நடந்ததை நாம் அறிவோம்.

 

Related Posts

Leave a Reply