125 கிராமப்புறங்களுக்கு இலவச வை-பை சேவை: பேஸ் புக்

449

 829 total views

 சமீபகாலமாகவே  Free Basics விவகாரத்தில்  சில பின்னடைவுகளை சந்தித்து வந்து கொண்டிருக்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக்   தற்போது   புதிதாக ஒரு அம்சத்தினைக்  களமிறக்க வழி செய்து வருகிறது. பேஸ்புக்  அடுத்த கட்டமாக   இணைய சேவையை வழங்கும் நிறுவனமாக மாறவுள்ளது. ஆம், இந்தியாவில்  பல கிராமப்புறங்களுக்கு இலவச வை-பை சேவையை அறிமுகபடுத்த தயாராக்கி வருகிறது.  இத்திட்டத்திற்கு தகவல் தொலை தொடர்பு சேவையை வழங்கிக்  கொண்டிருக்கும் நிறுவனமான  BSNL உடன்  இணைந்து செயல்படுத்த உள்ளது.இதற்கென பத்து கோடி ரூபாயை  முதலீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்  இந்தியாவில் 125 கிராமங்களில்  இலவச வை-பை வசதி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  இவற்றுள்  2Mbps -க்கு  உட்பட்ட வேகத்தில் வழங்கவுள்ளனர்.   இந்த செயல்முறைகளை  BSNL-இன் பங்குதாரரான குவாட் ஜென்னுடன்   சேர்ந்து  அமல்படுத்த உள்ளனர். இதேபோன்று  சமூக வலைதளமான  பேஸ்புக், இணைய சேவைகளை வழங்கும் AirJaldi நிறுவனத்துடன்   இணைந்து  இதற்குமுன் இந்தியாவிற்கு அருகிலுள்ள நேபாள எல்லையில்      இலவச வை-பை திட்டத்தினை அறிமுகபடுத்தியது.  இந்த திட்டத்தினால் முப்பதாயிரம் மக்களைக்  கொண்ட அப்பகுதியில் தற்போது சரியாக,   6,000 பயனர்கள் அன்றாடம் இலவச வை-பை சேவையினை  பயன்படுத்தி வருகின்றனர். இத்திட்டத்தில் இரண்டு வகையான ஸ்கீம்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றுள் முதலாவதாக  நாள் ஒன்றுக்கு  100MB  டேட்டாக்களை பத்து ரூபாயிலும்,   மாதத்திற்கு 20GB  டேட்டாக்களை  200ரூபாய்களுக்கும்  வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஏர்டெல், ஐடியா, வோடபோன்  போன்ற  இணைய சேவைகளை வழங்கும்  நிறுவனங்களால்  நிர்ணயிக்கப்பட்ட இன்றைய விலையை ஒப்பிடுகையில் இவை மிகவும் மலிவானதாகவே கருதப்படுகிறது.  இதன் வழியே முற்றிலும்  இணைய வசதி இல்லாத கிராமப்புற வாசிகளை இணையத்திற்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். இன்றும் பல கிராமங்களில் கம்ப்யூட்டர், லேப்டாப் என அனைத்து சாதனங்களிருப்பினும்  அவற்றில் இணைய  சேவைகளை உபயோகிக்க முடியாத ஏழ்மை சூழ்நிலைகளை கொண்டவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைய வாய்ப்புள்ளது.



 

You might also like

Comments are closed.