Facebookல் நம்முடைய நண்பர்கள் பகுதியை மற்றவர்களிடம் இருந்து மறைப்பது எப்படி?

738

 1,896 total views

புதிய நண்பர்களை கண்டுபிடிக்க இந்த Facebook தளம் மிகவும் பயன்படுகிறது. இப்படி நாம் உருவாக்கிய நண்பர்களின் List நம் Facebook கணக்கிற்கு வரும்.,  மற்றவர்களுக்கும் தெரியும் வகையில் இருக்கும். இதனை எப்படி மாற்றுவது?  நம்முடைய நண்பர்கள் பகுதியை மற்றவர்களிடம் இருந்து எப்படி மறைப்பது என இங்கு பார்க்கலாம்.

  • முதலில் உங்கள் facebook கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அடுத்து உங்கள் கணக்கு பகுதியில் உள்ள ரகசியகாப்பு அமைப்புகள் என்பதை தேர்வு செய்யவும்.
  • அடுத்து உங்களுக்கு வேறு window open ஆகும். அதில் உள்ள Connecting On Facebook பகுதியில் உள்ள View Setting என்பதை click
    செய்யுங்கள்.

  • உங்கள் நண்பர்கள் பட்டியலை பார்க்க என்ற பகுதியில் உள்ள Tabஐ click செய்து அதில் உள்ள Customize என்பதை click செய்யுங்கள்.

  • உங்களுக்கு வேறு window open ஆகும். அதில் உங்களுக்கு தேவைக்கு ஏற்ற மாதிரி அதில் உள்ள வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.

நண்பர்களின் நண்பர்கள்: இதனை தேர்வு செய்தால் உங்கள் நண்பர்கள் list உங்கள் நண்பர்கள் மட்டுமல்லாது அவரின் நண்பர்களுக்கும் தெரியும்

நண்பர்கள்  : இந்த வசதியை தேர்வு செய்தால் உங்கள் கணக்கில் உங்களோடு நண்பர்களாகி உள்ளவர்களுக்கு மட்டும் இந்த பகுதி தெரியும்.

நான் மட்டும்: இந்த வசதியை தேர்வு செய்தால் உங்களை தவிர வேறு எவரும் உங்கள்Facebook நண்பர்கள் பகுதியை காண இயலாது.

குறிப்பிட்ட நபர்கள்: இந்த வசதியானது நாம் விரும்பும் நபர்களுக்கு மட்டும் இந்த நண்பர்கள் listஐ  காண்பிக்கலாம். இதை தேர்வு செய்து வரும் கட்டத்தில் அவர்களின் பேரை குறிப்பிட்டால் அவர்களுக்கு மட்டும் நாம் காண்பிக்கலாம்.

இந்த விண்ணப்பத்தை மறைக்கவும்: என்ற பகுதியில் நீங்கள் இந்த நண்பர்கள் listஐ மறைக்க விரும்பும் நபர்களை தனித்தனியே தேர்வு செய்து கொள்ளலாம்.

 

You might also like

Comments are closed.