இலவச DropBox வழியே உங்களின் கோப்புகளை எந்தக் கணினியிலும் பயன்படுதுங்கள்.

நீங்கள் அலுவலகம், வீடு, நண்பரின் வீடு என எங்கு சென்றாலும் ஏதேனும் ஒரு கணிப்பொறியைப் பயன்படுத்தும் நபரா?

ஏதேனும் ஒரு ஃபைல், புகைப்படம் உங்களின் வீட்டுக் கணினியில் இருக்கும் அதை தினமும் Modify செய்து மின்னஞ்சல் அல்லது Pendrive  மூலம் இங்கும் அங்கும் கொண்டுசென்று பயன்படுத்தும் நபரா?

உங்களுக்கு தேவையான ஃபைல் எந்த இடத்திலும் கிடைக்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது. அது தான் DropBox .

இதை உங்களின் கணினியில் நிறுவி DropBox எனும் ஒரு ஃபோல்டரில் உங்களின் எந்த ஃபைல், புகைப்படத்தையும் போட்டு வைக்கலாம்.  இப்போது DropBoxஐ உங்களின் laptopஇலும் நிறுவுங்கள். உங்களின் அனைத்து DropBox install செய்யப்பட்ட கனினிகளிலும் உங்களின் ஃபைல், புகைப்படங்கள் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு பின்வரும் வீடியோவைக் காணவும்.

Leave a Reply