குறிப்பிட்ட இணையதளத்திற்கு தொடர்பான விவரங்களை மட்டும் கூகுளின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்

421

 1,050 total views

நீங்கள் கூகுளில் ஒரு இணையதளத்தை பற்றி அறிந்துகொள்ள தேடும்பொழுது தேவையற்ற குறிப்புகளும் இணைய தொடர்புகளும் வரும். இதை தவிர்க்கவும் உங்கள் தேடுதலை நெற்படுத்தவும் பின் வரும் யுத்தியை பயன்படுத்தலாம்.

இந்த நிழற்படத்தில் உள்ளது போல் info:www.techtamil.com என்று தேடுதல் கொடுத்தால்

  • Googles cache
  • Similar to
  • link to
  • from the site
  • Contain the term

இவ்வாறு உங்களுக்கு காண்பிக்கும்

Googles cache என்பது ஒரு இணையதளம் கடைசியாக எவ்வாறு இருத்தது என்பதை கூகுள் சேமித்து வைத்திருக்கும் வழிமுறையாகும். இது ஒரு இணையதளம் இயங்க வில்லை என்றாலோ, அந்த இணையதளத்தை காணமுடியாது கட்டுப்பாடு விதித்தாலோ இதன் மூலம் நாம் அந்த இணையதளத்தை காணலாம்.

Similar to என்பது இந்த இணையதளத்தை போன்று வேறு எந்த இணையதளங்கள் இருக்கிறது என்பதை அறிய உதவும்,

Link to என்பது எந்த இணையதளங்கள் எல்லாம் இந்த இணையதளத்தின் பதிப்புகளின் விசயங்களை கொண்டுள்ளது என்று கண்டறிய உதவும்.

From the site என்பது இந்த இணையதளத்தில் உள்ள பதிப்புகளின் தொடர்பை மட்டும் கொடுக்கும்

Contain the term என்பது எந்த இணையதளத்தில் எல்லாம் www.techtamil.com என்ற வார்த்தை பதிவாகியுள்ளது என்பதை அறிய உதவும்.

You might also like

Comments are closed.