Bigrock domain பிளாக்கரில் செயல்படுத்துவது எப்படி?

781

 1,526 total views

நாளுக்கு நாள் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. வலைப் பதிவர்கள் அடுத்த கட்டமாக அவர்களின் வலைப்பூக்களை சொந்த domainக்கு மாற்ற விரும்புகின்றனர். Blogger மூலம் domain வாங்க வேண்டுமென்றால் credit card அவசியமாகிறது. இதனால் debit card, net banking, offline payment போன்ற வசதிகளை வழங்கும் Bigrock தளத்தை நாடிச் செல்கின்றனர். Googleல் domain வாங்கினால் நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை தானாகவே Re-direct ஆகிவிடும். ஆனால் Bigrock தளம் மூலம் domain வாங்கினால் பழைய தளத்திலிருந்து நாம் தான் புதிய தளத்திற்கு Redirect செய்ய வேண்டும். அதை எப்படிச் செய்வது என பார்ப்போம்.

  • முதலில் http://www.bigrock.in/ தளத்தை open செய்து கொண்டு My Account பகுதிக்கு செல்லுங்கள்.
  • பின்பு அங்கு உள்ள Menu barல் Domain என்பதை click செய்து அதில் List All Orders என்பதை click செய்யவும்.

அடுத்து வரும் windowவில் நீங்கள் வாங்கியுள்ள Domain link இருக்கும். அதன் மீது click செய்யவும்.

  • அடுத்து உங்களுக்கு இன்னொரு window open ஆகும். அதில் உள்ள DNS Management என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் Manage DNS என்பதை click செய்யவும்.

அடுத்து உங்களுக்கு இன்னொரு window open ஆகும். அதில் CNAME Records – Add CNAME Record என்பதை click செய்யவும்.

  • உங்களுக்கு இன்னொரு window open ஆகும். இதில் நாம் www வைத்து  (www.techtamil.com) ஒரு CNAMEம் , www இல்லாமல்(techtamil.com) ஒரு CNAME Record உருவாக்க வேண்டும்.
  • முதலில் www வைத்து உருவாக்க உங்களுடைய windowவில் Host Name என்ற இடத்தில் www கொடுக்கவும்.
  • Value என்ற இடத்தில் இரண்டாவதாக உள்ள ரேடியோ  button click செய்து கொண்டு ghs.google.com என்பதைக் கொடுக்கவும்.

  • படத்தில் உள்ளதைப் போல கொடுத்து விட்டீர்களா என சோதித்துக் கொண்டு கீழே உள்ள Add Record என்பதை click செய்யவும்.
  • அடுத்து www இல்லாமல் ஒரு CNAME Record உருவாக்க வேண்டும். பழைய படி Add CNAME Record என்பதை click செய்து வரும் windowவில் கீழே உள்ளதைப் போல கொடுக்கவும்.
  • இதில் Host Name என்ற இடத்தில் எதுவும் கொடுக்காமல் Value என்பதில் ghs.google.com என்பதை கொடுக்கவும்.

  • அடுத்து கீழே உள்ள Add Record என்ற button அழுத்தினால் உங்களுடைய  CNAME Records உருவாகி விடும்.
  • இப்பொழுது உங்களின் CNAME Records பகுதியில் கீழ் கண்டவாறு இருந்தால் இதுவரை நீங்கள் செய்தது சரியே என உறுதி செய்து கொள்ளலாம்.

  • வெற்றிகரமாக CNAME Record உருவாகிவிட்டது.
    இதை எப்படி பிளாக்கரில் அமைப்பது என பார்ப்போம்.
பிளாக்கரில் Re Direct செய்ய:
  • முதலில் உங்களின் பிளாக்கர் accountல் நுழைந்து கொள்ளுங்கள்.
  • பிறகு Settings – Publishing – Custom Domain – Switch to Advanced Settings என்பதை ஒன்றன் பின் ஒன்றாக click செய்யவும்.
  • அதில் Your Domain என்ற இடத்தில் உங்களுடைய தளத்தின் முகவரியை கொடுக்கவும். மறக்காமல் www என்பதை கண்டிப்பாகக் கொடுக்கவும்.

அடுத்து word verification சரியாக கொடுத்து கீழே உள்ள Save Settings என்ற button click செய்யவும். அடுத்து உங்களுக்கு இதே window மறுபடியும் வரும். அதில் உள்ள Redirect என்ற இடத்தில் உள்ள சிறிய கட்டத்தை தேர்வு செய்யவும்.அடுத்து பழைய படி Word Verification கொடுத்து SAVE SETTINGS என்ற button click செய்தால் உங்களுடைய blog புதிய domainக்கு மாறிவிடும்.

 

You might also like

Comments are closed.