பிறந்த குழந்தையின் அழுகைக்கு பின்னால் உள்ள நிலையை கண்டறிந்து சொல்லும் புதுவகை பயன்பாடு:

 பிறந்த குழந்தையை பார்த்துக் கொள்வதென்பது மிகவும் கடினமான வேலையே !!  உங்கள் குழந்தை பசியால் அழுகிறதா? அல்லது  களைத்துப்  போய்  அழுகிறதா?  டையபர்களை மாற்றும் பொருட்டு  அழுகிறதா?  அல்லது வேறு ஏதேனும் உடல் நலக் குறைபாட்டால் அழுகிறதா? என்பதை  அறிந்து கொள்வது மிகக் கடினமே!
            குழந்தை எதற்காக அழுகிறது என்பதை கண்டறியும் பொருட்டு தாய்வான்  நாட்டைச்  சார்ந்த அறிவியலாளர்கள் ஒரு அரிய வகை  கண்டுபிடிப்பின் மூலம்   உணர்த்தியுள்ளனர். இதில் பலவகை குழந்தைகளின் அழுகைகளை சேகரித்து ஒரு தொகுப்புகளாக்கி  அதன் மூலம்  ஒரு குழந்தை எந்தெந்த நேரங்களில் எப்படி நடந்து கொள்ளும் , எப்போது எப்படி அழுகும் என்பது போன்றவற்றை  அறிந்து கொள்ளலாம். அதனால் அழுகைகளின் வகைகளை அறிந்து கொண்டும்  அதன் மூலம்  ஒரு குழந்தை எதற்காக அழுகிறது என்பதை உணர்ந்து தாய் அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்.

 இந்த முயற்சியை மேற்கொள்ள இந்த குழு சுமார் இரண்டு வருட காலமாக 200,000  அழுகுரல்களை புதிதாக பிறந்த 100 குழந்தைகளிடமிருந்து சேகரித்துள்ளது.இதுவரை சோதனை செய்துள்ள இந்த பயன்பாட்டில் பயனர்களின் கருத்துப்படி இந்த பயன்பாடு 92%  துல்லியத்தை அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.ஆனாலும் இந்த பயன்பாடு பிறந்து ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே துல்லியமாக உள்ளது . அதற்கு மேல் வயதில் உள்ள குழந்தைகளுக்கு இது பொருந்தாத ஒன்றாக இருக்கும் எனவும்  தெரிவித்துள்ளனர்.
              இந்த பயன்பாட்டை பதிவிறக்கம் செய்தபின் குழந்தை அழ ஆரம்பித்தவுடன் ரெக்கார்ட் பட்டனை அழுத்தினால் அதன் பின் தொடர்ந்து  பத்து வினாடிகளுக்கு ரெக்கார்ட் செய்து அந்த டேட்டாவை கிளவுடிற்கு  அனுப்பபடுகிறது. அதன் பின் டேட்டா பேஸ்களை முழுமையாக ஆராய்ந்த பின்னர் குழந்தையின் அழுகைக்கு பின் உள்ள தகவல்களை பெற்றோரின் மொபைல் சாதனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
         இவை பிறந்து சில மாதங்களே ஆன  குழந்தைகளுக்கு மட்டும் உகந்ததாக அமைவது ஒரு குறைபாடாக இருந்தாலும் எதற்காக குழந்தை அழுகிறது என்ற தகவல்களை பெற்றோருக்கு தெரிவிப்பது சிறந்ததே! இதன் வழியே  வாய்பேச முடியாத மற்றும் உடல் நலம் குன்றியவர்கள், நோயாளிகள்  போன்றோரோரின் சைகைகளையும்  பேச்சுகளையும் உணரும்படி பயன்பாடுகளை பிறகாலத்தில் கண்டறிய வழிவகுக்கலாம். இந்த பயன்பாடு தற்போது ஆப்பிள் மற்றும் கூகுள்  பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது.

Leave a Reply