அமேசானின் ரீபண்ட் பாலிசியில் ஏற்பட்டுள்ள மாற்றம்:

screen-shot-2016-04-06-at-8-44-15-am
இணைய வாணிகத்தை மேற்கொள்ளும்  மிகவும் பிரபலமான வாணிக தளமான அமேசான் நிறுவனம் கடந்த மாதம் வாடிக்கையாளர்கள் இணையத்தில் வாங்கும் பொருள்களுக்காண ரீபண்ட் பாலிசியை அறிவித்திருந்தது. அதன்படி ஆன்லைனின் ஆர்டர் செய்து  ரீபண்ட்செய்யும்   மொபைல் போன்களுக்கு மட்டும்   எந்த வித பணமும் திருப்பி அளிக்கப்படமாட்டாது. அதற்குமாறாக பழுதான சாதனத்திற்கு பதில்  வேறு ஒரு சாதனம் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்படிருந்தது. மேலும் இதுவும் வாங்கிய  பத்து நாட்களுக்குள் கொண்டுவருபவர்களுக்கு  மட்டுமே! பெரும்பாலும் பலர் இணையத்தில் பொருட்களை வாங்கிவிட்டு முப்பது  நாட்களுக்கு மொபைலை பயன்படுத்தி விட்டு பின் மொபைல்களை திருப்பி கொடுப்பது போன்ற தவறான செயல்களால்  இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.  தற்போது இந்த ரீபன்ட் பாலிசியில் மேலும் ஒரு அதிரடி மாற்றத்தை சேர்த்துள்ளனர் .”அதன்படி இந்த கொள்கை மொபைல் போன் உட்பட  லேப்டாப், டேப்லட், டெஸ்க்டாப்,மானிட்டர், காமிரா, காமிரா லென்சுகள்  போன்றவற்றிற்கும் பொருந்தும் “. எனவே  இனி அமேசானில் மொபைல் போன், லேப்டாப், டேப்லட், டெஸ்க்டாப்,மானிட்டர், காமிரா, காமிரா லென்சுகள் போன்றவற்றினை வாங்குபவர்களுக்கு பழுதடைந்த பொருட்களை திருப்பி கொடுக்கும்போது அவர்களுக்கு பணம் திருப்பியளிக்கப்படமாட்டாது. அதற்குமாறாக வேறு ஒரு சாதனத்தினை மட்டுமே பெற மமுடியும். மே 11 க்கு பிறகு அமேசானில் வாங்கும் மொபைல் போன், லேப்டாப், டேப்லட், டெஸ்க்டாப்,மானிட்டர், காமிரா, காமிரா லென்சுகள்   போன்ற பொருட்களுக்கு  பணம் திருப்பிதரப்பட மாட்டாது.  சாதனங்கள் மட்டுமே  மாற்றித் தரப்படும். அமேசான் மட்டும் இந்த பாலிசியை கடைபிடிக்கவில்லை பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்  போன்ற வாணிக தளங்களும் இது போன்ற கொள்கைகளை பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
                                   mmmmmmmmmmmmm

Related Posts

Leave a Reply