உங்களை வேளையில் அமர வைக்கும் அந்த ஆறு பொய்கள்:

552

 2,944 total views

இனடர்வியூ சமயங்களில் பொய் கூற வேண்டுமா?  கேட்பதற்கே புதிதாக அல்லவே இருக்கிறது. ஆம் சில இடங்களில் பொய் கூறிதான் ஆகவேண்டும் என ஆன்லைன் வேலைவாய்ப்பு அதிகாரி பீட்டர் ஹாரிஸ் கூறியுள்ளார். அதிக சம்பளத்துடன் கூடிய ஒரு நல்ல வேலையை பெற வேண்டும் எனில் சில பொய்கள் அவசியமே. அப்படிப்பட்ட பொய்கள் கண்டிப்பாக உங்களிடம் இல்லாத ஒரு திறமையைக் குறித்து இருக்கக் கூடாது. ஏனெனில் அந்த திறமை உங்களிடம் இல்லாத போது நீங்கள் கண்டிப்பாக வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட  மாட்டீர்கள். மேலும் அனுபவம் சார்ந்த பொய்யினையும் கூறமுடியாது. அது உங்கள் பின்னனியையும் எளிதாக காட்டிக் கொடுத்துவிடும். இதனால் மிகைப்படுத்தப்படாத சில பொய்களைக் கூறி வேலையை எப்படி பெறுவது என்று காணலாம். வேலைவாய்ப்பு போட்டி நிறைந்த உலகில் உங்கள் வேலையில் உங்கள் தகுதிகளை பாதிக்காத சில பொய்களை கூறி வேலையை பெறுவது எப்படி ?

1. நீங்கள் பல நிறுவனங்களில் வேலை பார்த்து பல காரணங்களால் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அதை கண்டிப்பாக கல்வி தகுதி படிவத்தில் தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்த கல்வி தகுதி படிவத்தில் நீங்கள் வேலை பார்த்த ஒவ்வொரு நிறுவனத்திலும் கிடைத்த நேர்மறை அனுபவங்களையும் வேலை சம்பந்தப்பட்ட சிறந்த அனுபவங்களையும் பற்றி அதிகமாக பட்டியலிடப்பட வேண்டும். மாறாக எதற்கு வேலை விட்டு நீக்கப்பட்டோம் என்பது போன்ற கசப்பான அனுபவத்தை தவிர்க்க வேண்டும்.
2. இதற்கு முன் வேலை செய்த பணியிடத்தில் அனைத்து ஊழியர்களுக்கு என்னுடன் பணியாற்றுவது மிகவும் பிடித்திருந்தது என்பது போன்றவற்றை கூறவேண்டும் இதுபோன்ற செய்திகள் இதற்கு முன் வேலை செய்த நிறுவனத்தில் சக ஊழியர்களுடன் எந்த ஒரு புகார் மற்றும் பிரச்சனை இல்லாமல் வேலை செய்த எண்ணத்தை கண்முன் கொண்டுவரும்.

3. கல்வி படிமத்தை பொறுத்தவரை உங்கள் பொழுதுபோக்கு பக்கத்தில் டிவி பார்ப்பது, சாப்பிடுவது, விளையாடுவது போன்ற பட்டியல்கள் அல்லாமல் நீங்கள் விண்ணப்பித்த நிறுவனத்திற்கு ஏற்ற பொழுதுபோக்கினை தேர்ந்தெடுத்து எழுதுவது மிகவும் அவசியம்.

4. ஒருவர் பணியைவிட்டு நீங்குவதற்கு முக்கிய காரணம் பெரும்பாலும் அவருடைய பழைய முதலாளியுடன் ஏற்பட்ட மன கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதை கண்டிப்பாக புதிதாக வேலையில் சேரும் இடங்களில் காட்டிக் கொள்ளக்கூடாது. அதைத்தவிர பழைய முதலாளியிடம் கற்றுக்கொண்ட மற்றும் வியர்ந்த செய்திகளைக் மட்டுமே கூறவேண்டும்.

5. கண்டிப்பாக பெரும்பாலும் கேட்கக் கூடிய எதற்காக முந்தைய வேலையை விட்டு நீங்கி இந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு கண்டிப்பாக சக ஊழியர்களையோ முதலாளியையோ பணியாளர்களையோ காரணம் காட்டாமல் இந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பிற்காக தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன் என்று காட்டிக் கொள்ளவேண்டும்.

6. My Greatness and Weakness என்ற கேள்விக்கு கண்டிப்பாக உங்களது உண்மையான பலவீனத்தை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனெனில் இந்த கேள்விக்கு பொய்யான பதிலைத்தான் கூறுவார்கள் என்பது தெரிந்த ஒன்றே.அதனால் நீங்கள் குறிப்பிடக்கூடிய பலவீனம் கண்டிப்பாக நீங்கள் செய்யக்கூடிய வேலைக்கு தீங்கிளைக்காத வண்ணம் இருக்கவேண்டும். மேலும் அந்த பலவீனத்திலிருந்து உங்களை மேம்படுத்த என்னென்ன வழிமுறைகளை கையாண்டு கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிவிக்கவேண்டும். இது உங்களை சுயநம்பிக்கை மற்றும் வேலையில் கெட்டிக்காரர்கள் என்பதை காட்டிக்கொள்ள உதவும்.

You might also like

Comments are closed.