500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :

download-5

நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வரப் போகிறது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.

   ”இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் செல்லாது. எனவே இந்திய மக்கள் தற்போது வைத்திருக்கும்  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வரும் டிசம்பர் 30-ஆம்  க்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.நவம்பர் 10-ஆம் தேதி முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களில், மக்கள் தங்களிடமுள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தலாம். வங்கிகளில் மக்கள் ஒப்படைக்கும் தொகையானது,அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.நோட்டுக்களை  ஒப்படைக்க  செல்லுகையில் அடையாள அட்டை கொண்டு செல்வது  மிக அவசியம்.
நவம்பர் 24-ஆம் தேதி வரை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு  4000 ரூபாய்க்கு மட்டுமே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்த முடியும்.”என மோடி தெரிவித்துள்ளார். மற்றும்  அடுத்த 72 மணி நேரங்களுக்கு  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அரசு மருத்துவமனைகள், விமான நிலைய டிக்கெட் கவுண்டர்கள்,ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்கள்,அரசுப் பேருந்து டிக்கெட் கவுண்டர்கள் ஆகியவற்றில் மட்டுமே செல்லுபடியாகும். பெட்ரோல்,டீசல் மற்றும் கேஸ் நிரப்பும் மத்திய எண்ணெய் நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற பங்க்குகள்,மாநில அரசின் கூட்டுறவுத் துறை அங்காடிகள்,மாநில அரசின் பால் பூத்துகள்,சுடுகாடுகள் ஆகியவற்றிலும் அடுத்த 72 மணி நேரங்களுக்கு மட்டும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்.
காசோலை,டி.டி,கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் நடக்கும் பணப்பரிவர்த்தனைகளில் எந்த வித மாற்றமும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.புதிய வடிவிலான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 10-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் எனவும் பிரதமர் தனது உரையில் அறிவித்துள்ளார்.

புதிய நோட்டுக்கள் எப்படி இருக்கும் என்பதையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டுகளில் செங்கோட்டை இமற்றும் மங்கல்யான் ராக்கெட்டும் இடம் பெற்று இருக்கும். நவம்பர் 10ஆம் தேதி இந்த புதிய ரூபாய் நோட்டுகள் சந்தைக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.
new

Leave a Reply