மறந்து போன இணையதளங்களை தேடுவதற்கு

796

 1,825 total views

“அடடா அந்த இணையதளத்தின் முகவரியை குறித்து வைக்காமல் போய் விட்டோமே” என்று பெரும்பாலான இணையவாசிகள் புலம்புவார்கள். எவ்வளவு முயன்றாலும் அந்த தளத்தின் முகவ‌ரியை நினைவில் கொண்டு வர முடியாமல் போகும்.

இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே bookmarking சேவை தளங்கள் இருக்கின்றன. எந்த தளத்தின் முகவரியையும் மறந்து விட்டு தேடித் தடுமாறாமல் இருக்க bookmarking தளங்களில் குறித்து வைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் bookmarking செய்யப்பட்ட தளங்கள் சேமித்து வைத்ததோடு பலரும் அவற்றை திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இதனைத் தவிர்க்கும் வகையில் புதியதொரு bookmarking வசதி அறிமுகமாகியுள்ளது. உண்மையிலேயே புதுமையான bookmarking சேவை தான் இது. காரணம் recall என்னும் அந்த வசதியில் bookmarking செய்யாமலேயே bookmarking வசதியை பயன்படுத்தலாம். அதாவது நாம் பார்க்கும் தளங்களை குறித்து வைக்காமலேயே அவை மீண்டும் தேவைப்படும் போது அழகாக தேடி எடுத்து விடலாம். அதெப்படி bookmarking செய்யாமலேயே தளங்களை கண்டுபிடிக்க முடியும் என்றால் recall இணையவாசிகள் சார்பில் அவர்கள் விஜய‌ம் செய்யும் எல்லா இணைய பக்கங்களையும் குறித்து வைத்து கொண்டு கேட்கும் போது எடுத்து தந்துவிடும்.

கூகுளின் பிரபலமான குரோம் பிரவுசருக்கான விரிவாக்க வசதியாக உருவாக்கப்பட்டுள்ள recall ஒருமுறை பொருத்திக் கொண்டு விட்டால் அதன் பிறகு அது ஒரு விசுவாசமான உதவியாளரைப் போல நாம் செல்லும் எல்லா இணையதளங்களையும் குறித்து வைத்துக்கொள்ளும். வெறும் முகவரியை மட்டும் அல்லாமல் இணையதளத்தில் உள்ள விஷயங்க‌ள் அனைத்தையும் சேமித்துக் கொள்கிற‌து. பின்னர் எப்போது தேவை என்றாலும் நாம் பார்த்த இணைய‌தளத்தை தேடிக் கண்டுபிடித்து தருகிறது. தேடியந்திரத்தில் தேடுவது போலவே நினைவில் உள்ள ஏதாவது ஒரு விஷயத்தை குறிச்சொல்லாக பயன்ப‌டுத்தி தேடிக்கொள்ளும் வசதியும் உள்ளது. இணையதள முகவரி http://www.recawl.com/

 

 

You might also like

Comments are closed.