இணையத்தின் பயன்பாட்டினை அறிந்து கொள்வதற்கு…

840

 1,634 total views

Broadband இணைய இணைப்பு வெகுவேகமாகப் பரவி வருகிறது. இதனை வழங்கும் சேவை நிறுவனங்கள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படும் தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு GB வரை ஒரு கட்டணம் என்றும் அதன் பின்னர் ஒவ்வொரு MBக்குத் தனிக் கட்டணம் வாங்குகின்றனர்.

சில நிறுவனங்களின் திட்டங்களில் நமக்கு எப்படி இந்த அளவினை மேற்கொள்கிறார்கள் என்று காட்டப்படுவது இல்லை. இதனால் இணைய இணைப்பினைப் பயன்படுத்தினால் ஒரு மணிக்கு இவ்வளவு என அந்தப் பயன்பாட்டு நேரத்திற்குமான கட்டணத்தினை மட்டும் செலுத்தும் திட்டத்தினைப் பலர் விரும்புகின்றனர். ஆனால் சில நிறுவனங்கள் மட்டுமே இது போன்ற மணிக்கணக்கினாலான திட்டத்தினை  அளித்து வருகின்றன.

நம் இணைய பயன்பாட்டினை நாம் அளந்து பார்த்து அறிய முடியாதா என்ற கேள்விக்கு விடையாகச் சில புரோகிராம்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று BitMeter OS ஆகும். இதனை  http://codebox.org.uk/bitmeterOs என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Windows, Linux  மற்றும் Mac இயங்குதளம் ஆகிய systemகளில் இயங்கும் வகைகளில் கிடைக்கிறது.  இணையத்தில் இது இலவசமாய் கிடைக்கிறது. இதனைத் தரவிறக்கம் செய்த பின்னர் இதன் ZiP கோப்பை விரித்து, அதனை ஒரு கோப்பறையில் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் application கோப்பை இயக்கி இந்த புரோகிராமினை நிறுவச் செய்திடவும். கணினியில் நிறுவியவுடன், நமக்கு அது குறித்து ஒரு செய்தி கிடைக்கும். இதன் பின்னர் நாம் அறியாமலேயே இந்தப் புரோகிராம், கணினியின் பின்னணியில் இயங்கும். நீங்கள் எவ்வளவு தகவலைப் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்கிறீர்கள் என்ற கணக்கை எடுத்துக் கொண்டிருக்கும்.

இங்கு கிடைக்கும் பயனர்முகத்தில்(Interface) காட்டப்படும் monitorல், பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகம், graphical மற்றும் digital வடிவில் கிடைக்கின்றன. கீழாக வலது புறம் உள்ள கடிகாரத்தில் stopwatch பயன்பாட்டினை மேற்கொள்ளலாம்.

இதன் மூலம் குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு தகவல் பயன்படுத்தப்பட்டது என அறியலாம். History Tabல் click செய்தால் நீங்கள் பயன்படுத்திய அளவினை மணி, நிமிடம், நொடி முதல் அறியலாம். பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் பார்கிராப் மூலம் காட்டப்படுகிறது.

Summary Tab ஒரு மாதத்தில் நீங்கள் மேற்கொண்ட மொத்த இணைய அளவினைக் காட்டுகிறது. என்ற Query Tabன் மூலம், குறிப்பிட்ட கால அளவிலான தகவல் எவ்வளவு என்று காணலாம்.

மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளைக் காட்டிலும் ஒரு சிறப்பான வசதி Alerts என்ற டேப்பில் தரப்பட்டுள்ளது. இதில் பல அளவுகளை நாம் வரையறை செய்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட தகவலை பதிவிறக்கம் அல்லது பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டவுடன் நம்மை எச்சரிக்கும்படி set செய்திடலாம். ஒரு மாதத்தில் பயன்பாடு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என வரையறை செய்தால், அதற்கேற்ற வகையில் நாம் பயன்பாட்டினைக் காட்டும்.

Calculator என்ற Tab மூலம் நாம் தரவிறக்கம் செய்திடும் கோப்பு இன்னும் எவ்வளவு நேரத்தில் முழுமையாக கணணியில் இறங்கும் என அறிந்து கொள்ளலாம்.

Broadband பயன்படுத்தும் அனை வரும் கட்டாயம் கணணியில் நிறுவச் செய்திட வேண்டிய புரோகிராம் இது.

You might also like

Comments are closed.