சுலபமாக ஆங்கிலம் கற்க உதவும் பயனுள்ள தளம்!!

ஆங்கிலம் கற்க வேண்டும் என்றால் பலருக்கும் பயம் தான். இப்போது வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் கற்கலாம். ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் classbites தளமும் ஒன்று.இதில் என்ன சிறப்பு என்னவென்றால் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்றுக் கொள்ள classbites வழி செய்வது தான்.


பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள். ஆசிரியர் எளிதாக சொல்லிக் கொடுத்தாலும் கூட சிக்கல் ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு தான் classbites வீடியோ வடிவிலான குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது. கல்வி உலகில் இப்போது
குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.

குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல். அதிக நேரம் தேவைப்படாமல் குறுகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்தப் பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன. Classbites தளத்தில் காணக் கூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓடக் கூடியவை.

குறுங்கல்வி(Micro learning) என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

வார்த்தை உச்சரிப்பு, இலக்கண பயன்பாடு, கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.

குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எப்போது விருப்பமோ அப்போது படித்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.

உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும். இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடங்கள் தேவை என்று பரிந்துறைப்பதற்காகத் தான்.

ஒரு விதத்தில் classbites தளம் இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும். சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

பாடங்களை படிக்கத் துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்ளவும் சுவையான வழிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள். இந்த தளத்தின் முகவரி http://classbites.com/

 

Leave a Reply