கூகுள் காலண்டரில் ஏற்பட்ட மாற்றம்:

images (5)
கூகுள் நிறுவனம் தற்போது வழங்கிவரும் இணைய சேவைகளில் ஒன்றான கூகுள் காலண்டரில் புதிதாக மாற்றம் ஒன்றை செய்துள்ளது. அதாவது கோல்ஸ் (Goals) எனப்படுகின்ற புதுவகை நுட்பம் ஒன்று அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட குறிக்கோளை அடைய அதற்கேற்ற திட்டங்களை எளிதாக திட்டமிடகூடியதாக இருக்கின்றது.உதாரணமாக ஒரு வாரத்தில் நன்கு நாட்கள் கட்டுரை எழுத வேண்டும் என்று குறித்து கொண்டால் எந்தெந்த நாட்களில் அதனை செய்ய வேண்டும், எந்த நேரத்தில் செய்ய வேண்டும் போன்றவற்றினை குறித்துக்கொள்ளலாம். மேலும் இவற்றில் நமது தேவைக்கேற்ப மாற்றங்களை செய்துகொள்ளக்கூடிய வசதியும் தரப்பட்டிருத்தல் கூடுதல் அம்சமாகும்.   மேலும்   நம்முடைய காலண்டரில்  எந்த நேரம்  காலியாக உள்ளன என்பதையும் அதில் என்னனென்ன பயிற்சிகள் மேற்கொள்ளலாம் என்பதையும்  பரிந்துரை செய்கிறது. இதன் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை செய்ய வேண்டிய வேலைகளை  எளிதாக செய்துமுடிக்கலாம்.
images (4)

Related Posts

Leave a Reply