கணினியை பற்றி துல்லியமாக முழுவிவரங்களை அறிய

1,152

 2,621 total views

கணினியை பயன்படுத்தும் அனைவருக்கும், கணினியை பற்றி முழுமையாக தெரிந்திடாது. ஒரு சிலருக்கு தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று தெரியாது. ஒரு சில நேரங்களில் தன்னுடைய நண்பர்கள் அவர்களுடைய கணினியை பற்றி கேட்பார்கள் அப்போதுதான் அவசரம் அவசரமாக தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்ப்போம்.  இவற்றை நாம் தெளிவாகவும் காண முடியாது. விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்திலும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கவும், கணினியை பற்றிய முழுவிவரங்களையும் அறிய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க  http://arvinsoft.weebly.com/sys-information.html

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஓப்பன் செய்யவும். இதில் தனித்தனி பகுதிகள் உள்ளன. அதன்படி கணினியில் என்னென்ன ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்கள் உள்ளன என்பதை மிகவும் தெளிவாக காண முடியும். மிகவும் துல்லியமாக கணினியின் விவரங்களை காண முடியும்.

You might also like

Comments are closed.