கடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு ஒரு தளம்

618

 1,198 total views

மின்னஞ்சல் (E-Mail) அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன. அதில் மிகவும் பிரபலமான தளங்கள் Yahoo, GMail, HotMail ஆகும்.

இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக open செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது.

நாம் word, pdf மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் (password) உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே open செய்ய முடியும்.

இதனால் அவற்றில் உள்ள தகவல்கள் திருட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் கடவுச்சொல் இல்லாமல் உள்ள கோப்புகளை மிகவும் எளிமையாக மற்றவர்களால் பார்க்கவோ அல்லது திருடிவிடவோ முடியும். இதுபோல் நாம் அனுப்பும் மின்னஞ்சல் ஒவ்வொன்றுக்கும் கடவுச்சொல் தந்தால்  எவ்வாறு இருக்கும். இதற்கு LOCKBIN என்னும் தளம் உதவி செய்கிறது.

http://www.lockbin.com/lockbin.php  தளத்திற்கு செல்லவும். அங்கு தோன்றும் window-வில் உங்களுடைய பெயர், உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிடவும்.

பின் நீங்கள் குறிப்பிட வேண்டிய செய்தியை தட்டச்சு செய்து பின் வேண்டிய கோப்பினை பதிவேற்றம் செய்து மேலும் CAPTCHA கோடினை உள்ளிட்டு இறுதியாக ஒப்பந்த check box-ல் Tick செய்து SUBMIT button அழுத்தவும். உங்களுடைய மின்னஞ்சல் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றுவிடும்.

உங்களுடைய நண்பர் அந்த மின்னஞ்சலை open  செய்யும் போது ஒரு window open ஆகும். நீங்கள் கொடுத்த கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலமாக உங்களுடைய நண்பர் அந்த மின்னஞ்சல் தகவலை பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு உங்கள் தகவல் உங்கள் நண்பர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக சென்றடையும்.

You might also like

Comments are closed.