இரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற

3,321

 5,896 total views

இரண்டு கணனிகளுக்கிடையில் எவ்வாறு பைல்களைப் பரிமாறலாம்?” என்பது பற்றி இப்போது பார்ப்போம். இங்கு சொல்லப்படும் முறை மூலம் பைல்களைப் பரிமாற மட்டுமே முடியுமே தவிர இரண்டு கணனிகளுக்கிடையில் இணைய இணைப்புகளை இணைக்கும் முறையல்ல. இரண்டு கணிணிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற, அடிப்படை தேவைகள் சில உண்டு.

முதலாவது, இரண்டு கணனிகளிலும் Network Card இருக்க வேண்டும். மற்றையது, இரண்டு கணனிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும்.

இரண்டு கணணிகளுக்கிடையில் Hub , Switch போன்ற இணைய சாதனங்கள் இல்லாமல் Network card ஊடாக இரண்டு கணனிகளை இணைக்க cross-over கேபில் பயன் படுத்தப்படுகிறது. இந்த cross-over கேபில் (கீழேயுள்ள படத்தைப் பார்க்க) வழமையான Ethernet கேபிலிலிருந்து வேறுபட்டது.

 

Cross-Over கேபில்

இரண்டு கணினிகளையும் cross-over கேபிலால் இணைத்த பின், அடுத்ததாக இரண்டு கணனிகளிலும் IP முகவரிகளை (IP address) மாற்றியமைக்க வேண்டும்.

அதற்கு முன், எவ்வாறு IP முகவரிகளை Windows XP இயங்கு தளத்தில் மாற்றியமைப்பது என்பது பற்றிப் பார்ப்போம்.

Step  1:
Start பின் Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அதன் window கீழே உள்ளவாறு காணப்படும்.

Step 2:

அதன் பின், புதிதாக வந்திருக்கும் window பின்வருமாறு காணப்படும்.

  • Local Area Network என்பதன் கீழ் உள்ள network cardக்குரிய Icon மஞ்சள் நிற விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் இருக்கும்.

(அதாவது இன்னும் இரண்டு கணினிகளும் தொடர்பாடலை மேற் கொள்ள தயாராயில்லை என்பதே ஆகும்).

Step 3:
அடுத்து அந்த மஞ்சள் நிற Icon மீது Right Click செய்து, புதிதாக வரும் Menuவிலிருந்து Properties என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General ரப் இன் (Tab) கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழே உள்ள  Properties பட்டனையும் click செய்யுங்கள்.

அதன் window கீழே உள்ளவாறு காணப்படும்.

Step 4:

புதிதாக தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழே உள்ள வாறு அதன் IP முகவரியை மாற்றியமையுங்கள்.

முதலாவது கணனியில் (கணனி-1) IP முகவரியாக 192.168.0.1 எனவும்,
இரண்டாவது கணனியில் (கணனி-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள்.

கீழேயுள்ள படத்தைப் பார்க்க.

இப்போது உங்கள் இரண்டு கணனிகளையும் ஒன்றாக இணைத்துள்ளீர்கள். நீங்கள் இரண்டு கணினிகளுக்கிடையில் தேவையானவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

நீங்கள் செய்தது சரி தானா? என்பதை உறுதி செய்து கொள்ள பின்வரும் முறையை பின்பற்றுங்கள்.

Step  1:

  • Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்க.
  • புதிதாக வரும் windowல் Network cardக்குரிய iconல் மஞ்சள் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம் அல்லது icon மேல் பூட்டு வடிவில் ஒரு icon இருக்கும்.

கவனிக்க:
Network cardக்குரிய icon மேல் பூட்டு வடிவில் இருந்தால் பைல் பரிமாறம் செய்வதை windows அனுமதிக்காது. ஏனென்றால், இது Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதைக் காட்டுகிறது. அதை சரி செய்ய, இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள். இது Firewall இயக்க நிலையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும். தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் இரண்டு கணணிகளுக்கிடையில் தேவையானவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

உங்கள் கணினி-1 in IP முகவரிகளை (IP address) பெற,

  • Start → Run ஐத் தெரிவு செய்யுங்கள். அதன் பின் தோன்றும் windowவில் “cmd”என type செய்யுங்கள்.
  • புதிதாக தோன்றும் windowவில் “ipconfig” என type செய்து enter கீயை அழுத்துங்கள்.
  • அந்த windowவில் ஐபி முகவரிகள் பற்றிய விபரம் பின்வருமாறு தெரியும்.

IP Address: 192.168.0.1
Subnet Mask: 255.255.255.0 (இது வேறுபடும்)
Default Gateway: 192.168.0.1 (இது வேறுபடும்)
Preferred DNS Server: 192.168.0.1 (இது வேறுபடும்)

இரண்டாவது கணனியிலும் கீழே உள்ளவாறு ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள் (இதற்கும் மேலுள்ள முறையைப் பின்பற்றுக).

IP Address: 192.168.0.2
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1

இவ்வாறு இருப்பின் இரண்டு கணினிகளுக்கிடையில் தேவையானவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள் .

You might also like

Comments are closed.