Featured Posts

என்ன தான் இருக்கிறது ChromeOSல்?என்ன தான் இருக்கிறது... முதலாவதாக இப்போது கிடைக்கும் க்ரோம் பதிப்பு ஒரு முழுமையான பதிப்பு அல்ல. ஆல்பா...

Readmore

கூகுல் $750 மில்லியன் கொடுத்து வாங்கப்படும் பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்ட நிறுவனம்.கூகுல் $750 மில்லியன்... கூகுள் நிறுவனம் $750 மில்லியன் டாலர் விலைக்கு AdMob என்ற மொபைல் விளம்பர சேவை நிறுவனத்தை...

Readmore

Google Wants No Competitors Google Wants No Competitors இன்று பலரும் MicroSoft நிறுவனத்தை பெரிதும் விரும்பாமல் இருக்கக் காரணம், அந்த நிறுவனம்...

Readmore

Story of an IT Project "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா...

Readmore

லேப்டாப் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவைகள்லேப்டாப் வாங்கும் முன்... எடை: தாங்கள் அடிக்கடி பயணம் செய்பவர் என்றால் எடை குறைந்த அளவு இருக்குமாறு...

Readmore

  • Prev
  • Next

Stop Using Google Buzz!

Posted on : 04-03-2010 | By : Karthik | In : General, News

0

கூகல் சமீபத்தில் அறிமுகப்படுத்திய பஸ்ஸ் எனும் சோசியல் வசதியில் ஒரு மிகப்பெரிய தவறு இருந்ததை பஸ்ஸ் அறிமுகமான இரண்டாம் நாளே கண்டுபிடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

என்ன தான் தவறு அது?

கூகல் பஸ்ஸ் என்பது ஒருவகையில் Orkut போன்ற ஒரு சோசியல் தளம் போன்றது. Twitter & Facebook போன்ற பிரபலமான தளங்களின் சில வசதிகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது தான் இந்த பஸ்ஸ்.

நீங்கள் யார் யாருக்கெல்லாம் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புகிறீர்களோ அவர்கள் உங்களின் நண்பர்களாக பஸ்ஸ் இணைத்துவிடும். நீங்கள் உங்களின் மேல் அதிகாரி அல்லது காதலன் / காதலி உடன் அதிகமாக சாத்திங் செய்திருந்தால் அவர்களும் உங்களின் பஸ்ஸ் நண்பர்களாகி விடுவர்.

உங்களின் பஸ்ஸ் நண்பர்களின் முழு மின்னஞ்சல் முகவரி  பிற அனைத்து பஸ்ஸ் நண்பர்கள் ஆனவருக்கும் தெரிந்துவிடும்.

பிரச்சனையின் தீவிரம் இப்போது உங்களுக்கு புரியலாம். பஸ்ஸ் உங்களின் அனுமதி கேட்காமலே உங்களுக்கு யார் எல்லாம் நண்பர்களாக இருக்கலாம் மற்றும் உங்களை யார் எல்லாம் நண்பராக்கிக் கொள்ளலாம் என தன்னிச்சையாக முடிவு எடுக்கும்.

அவர்களின் மின்னஞ்சல் முகவரியை அனைவருக்கும் தெரிவித்துவிடும்.

பஸ்ஸ் ன் செயல்பாடுகளினை நிறுத்த,

என்ற பக்கத்தை திறந்து “Disable Google Buzz” என்ற சிவப்பு நிற வாசகத்தை Click  செய்து அடுத்து வரும் குறும் ஜன்னலில் Also unfollow me from anyone I am following in Buzz, Google Reader, and other Google products. என்பதை டிக் செய்து பின்  “Yes, Delete My profile and posts”  என்ற பட்டனை அழுத்தவும்.

Real Heros of Internet

Posted on : 27-09-2009 | By : Karthik | In : General

0

Let me to introduce the most successful people of Internet. They really changed the world. It is really worth to know about them in between your busiest Orkut, Tagged.com social networking time.
Absolutely YES!

So, You wanna read their blog regularly? Yes it deserves :)

Google Wants No Competitors

Posted on : 26-09-2009 | By : Karthik | In : General, News

0

இன்று பலரும் MicroSoft நிறுவனத்தை பெரிதும் விரும்பாமல் இருக்கக் காரணம், அந்த நிறுவனம் மெதுவாக ஒரு மென்பொருள் ஏகாதிபத்யமாக மாறத் துவங்கியது. ஏகாதிபத்யம் என்றால், அந்த தொழிலில் அவர் வைத்தது தான் சட்டம். போட்டியாளர் யாருமே இல்லாத ஒரு சர்வதிகார நிலையை ஏற்படுத்த முயல்வது.

அதே போன்ற ஒரு சூழ்நிலையை Google ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. Google Search Engine தான் அதன் முதுகெலும்பு.

இணைய விளம்பர தொழிலில் அதன் போட்டியாளரான DoubleClick நிறுவனத்தை வாங்கிவிட்டது.
அதன் அடுத்த நிலை விளம்பர போட்டி நிறுவனங்களை (TextLinkAds, BuySellAds) நசுக்க முயற்சிக்கிறது.

ஒரு இணையதளம் நல்ல எதிர்காலம் கொண்டதாக இருக்கும் போது, அதை போலவே ஒரு Clone இணையதளத்தை உருவாக்கி அந்த நிறுவனத்திற்கு போட்டியாக வெளியிடும். பின்பு அந்த போட்டி நிறுவனத்தை 250-300% அதிக விலை குடுத்து வாங்கிவிடும். இதற்கு “FeedBurner” ஒரு சிறந்த உதாரணம்.

தற்போது Digg.com & Twitter.com போன்ற மிகச்சிறந்த Social Networking பக்கம் தனது பார்வையைத் திருப்பி உள்ளது.

iPhone, Symbion, PalmOS , J2ME & .NET Mobile SDK போன்ற மொபைல் மென்பொருள் தொழில்நுட்பத்தில் தனது Andriod Project ஆதிக்கம் செலுத்த வேண்டும் என எண்ணுகிறது.

இறுதியாக, “Chromium Project” மூலம் Desktop/PC வர்த்தகத்தில் இருக்கும் Windows/Linux/Mac உடன் போட்டி போட முயல்கிறது.

அனைத்து துறைகளிலும் சிறந்த போட்டியாளர் இருப்பது வாடிக்கையாளர்களுக்கு நல்லது தான். ஆனால் எப்பொழுது ஒரு நிறுவனம், தான் மட்டுமே தொழிலில் இருக்க வேண்டும் என எண்ணுகிறதோ அதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

வசதிகள் மிகக் குறைவாக இருப்பினும் சிலர் இந்த ப்ரௌஸர் Google வெளியிட்டது, என கண்மூடித்தனமாக Chrome உபயோகிக்கின்றனர்.

Mozilla Firefox போன்று Chrome Opensource Software இல்லை.

Mozilla Firefox, Orkut & Youtube போன்ற சிறந்த கண்டுபிடிப்புகள் Googleலால் வாங்கப்பட்ட நிறுவனங்கள்.

கணினி மாணவர்களின் எதிர்காலம் என்ன?

Posted on : 29-08-2009 | By : Karthik | In : General, Jobs, News

0

பலரும் IT துறை முடங்கி விட்டதாக முடிவு செய்து MBA, B.Com, M.Com படிக்கச் சென்றுவிட்டார்கள். எவ்வாறு பல மாணவர் மற்றும் பெற்றோர்களால் தொலைநோக்குப் பார்வை இல்லாது முடிவு எடுக்க முடிகிறது என வியப்பாக உள்ளது.

இந்தவருடம் பட்டம் பெரும் மாணவர்கள் மட்டுமே சில பெருமுயற்சிகள் செய்து பணியில் சேரவேண்டிய நிலைமை இருக்கும்.

புதிய BE.CS, Bsc CS, MCA மாணவர்களுக்கு 3-4 வருடங்கள் கழித்து வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

நீங்கள் திறமை இன்றி MBBS படித்தாலும், கிட்னி திருடும் மருத்துவமனை வைக்கலமே தவிர கைராசியான மருத்துவர் என பெயர் எடுக்க இயலாது.

நீங்கள் திருமணப் பத்திரிகையில் BE. MCA என போட விரும்பி படிப்பீர்களேயானால் உங்களுக்கு வேலை www pichumani.com இல் கிடைக்கலாம்.

திறமை வாய்ந்த மாணவர்களுக்கு கண்டிப்பாக பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளது.

Understand Online Money Making

Posted on : 22-08-2009 | By : Karthik | In : General

0

How to earn money 25000 per month? Is it really possible to make?

Understand how Google adsense works.