விண்டோஸ்7 இயங்குதளத்தில் ஆறு வேறுபட்ட பதிப்புகள் உள்ளன. Windows 7 Starter ,Windows 7 Home Basic இரண்டும் ஆரம்பப் பதிப்பு என்பதால் பல தேவைகள் அதில் கிடைக்காது. அதை மறந்து விடலாம்.
அடுத்து Home Premium பொதுவாக அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது என்பதால் வீட்டுப் பாவனைக்கு உகந்தது என சொல்ல முடியும். ஆனாலும் சில முக்கிய தேவைகள் அங்கில்லை என்பதை மறந்துவிட முடியாது.
என்னைப் பொறுத்த வரை அதைவிட, Windows 7 Enterprise போன்ற அனைத்துப் பதிப்புகளிலும் உள்ள அம்சங்களையும் கொண்ட Windows 7 Ultimate சிறந்தது எனச் சொல்வேன்.