திருக்குறளில் நான்கு மற்றும் ஐந்தாம் எண்ணின் சிறப்பு.

943

 4,258 total views

நான்கு என்னும் எண் பரம்பொருளாகிய கடவுள் என்கின்ற சக்தியை உணர்த்துவதாகவும் இவ்வுலகத்திற்கு தேவையான செல்வம் என்பதும் அச் செல்வத்தால் கிடைக்கும் இன்பம் என்பதும் நாலெழுத்துச் சொற்களே.

இவ்வுலகில் உள்ள இன்பத்தைத் துய்தபின் அறநூல்களின் வழி, வாழ்கையை வகுத்துக் கொண்டபின் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை அடைய முற்படுகின்றான். வள்ளுவர் நான்கு என்பதை வகைபடுத்தும் முறையைக் காண்போம். அரசன் சிறந்த அரசனாக இருபதற்கு தேவையானது என்னவெனில்,
அஞ்சாமை ஈகை அறிவூககும் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு ( 382 )
சிறந்த அரசன் மட்டுமன்றி சதாரண மனிதனும் பின்பற் வேண்டிய நால்வகை நற்குணங்கள்
அன்பறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு ( 513)
மனிதன் தெளிவுடையாவனாக இருக்க வேண்டுமென்றால் அன்போடும், அறிவோடும், யாரிடமும் தேவையற்ற ஐயமில்லாமலும், நன்மை, தீமையை தெளியும் ஆற்றல்
உடையவனுமே தெய்வ நிலைக்கு உயர்வான், இவ்வாறு உயர்கின்ற மனிதன் ஐம்பெரும் பூதங்களையும் வசப்படுத்தலாம்.
ஐந்து என்னும் எண்ணின் சிறப்பு “பஞ்சாட்சரம்” எனப்படும்

“நமச்சிவாய ”  என்னும் ஒப்பற்ற மந்திரம் உயிருக்கு நற்கதி தரும் மந்திரமாம். ஐந்து என்பது பஞ்ச பூதத்தையும், பஞ்ச லோகத்தையும், பஞ்ச கன்னியரையும் குறிக்கும். வள்ளுவர் தன் பனுவலில் “ஐந்து” என்ற எண்ணை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளார்.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையின் ஏமாப்பு உடைத்து ( 126 )
ஒரு பிறப்பில் ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால் அகது அவனுக்குப் பலபிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.
ஐம்புலங்களையும் மட்டும் அடக்கி பெறுகின்ற சிறப்போடு புகழ்சேர்க்க வேண்டுமென்றால் ஒரு மனிதன்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை ( 43 )
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
இவ்வாறு கடமை ஆற்றும் மக்கள் இறைவனை அடைவதற்குரிய ஆறு  ( வழி ) எது ?
நன்றி

You might also like

Comments are closed.