திருக்குறளில் எண்கள்

3,063

 14,270 total views

மழலையாக மண்ணில் தவழ தொடங்குகின்ற காலம் முதல் ஆடி அடங்குகின்ற அந்திம காலம் வரை மனிதனின் வாழ்வில் எண்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எண்கள் இல்லாமல் ஏதும்இல்லை என்ற

நிலை ஏற்பட்டுள்ளது.
  • மழலை பருவத்தில் குழந்டியின் வளர்ச்சியில் எண்ணப்படும் மாதங்களின் எண்ணிகையில் மகிழ்ச்சி .
  • கற்கின்ற காலத்தில் கல்வியில் பெரும் மதிப்பெண்ணின் மயக்கம் ,
  • காளையர்பருவத்தில் ஈட்டுகின்ற பொருளின் இன்பம்;
  • முடிவை நோக்கி செல்கின்ற முதுமைக் காலத்தில் ஆறடி மண்ணில் காணும் அமைதி
என எண்களின் ஆளுமை மனித வாழ்வில் மகத்தான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த எண்களால்தான் மனிதனின் வாழ்வே நிலைபெற்றுள்ளது
என்பதை வான்புகழ் வள்ளுவர்
” எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு ” என்கிறார்
எண்களை நிலைக்கலனகக் கொண்டு மனிதனை முன்னிறுத்தி வள்ளுவர் கூறுகின்ற கருத்துகளை விரிதுரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஒன்று என்று சொல்லபடுகிற எண் சமூகத்தில் ” ஒப்பற்றது “ என்கின்ற அடையாளச் சொல்லாகவும் ஒன்றாதல் ( ஐயிகியமாதல் ) எனும் பொருளையும், மற்றும் எண்ணிக்கை வழக்காகவும் பயன்படுகிறது.
” தகுதிஎன ஒன்றுநன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப்பெறின். ( இல்லறியல் எண் : 111 )
பகை, நட்பு, நற்பண்பு என்கின்ற பலகுணங்களைக் கொண்டிருந்தாலும் நடுவுநிலைமை என்ற ஒன்று ஓர் நல்லறமாகும் என்கிறார்.
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்.
பொன்றாது நிற்பது ஒன்று இல். ( புகழ் : 233 )
இரண்டாம் எண்ணின் சிறப்பு அடுத்த வாரம்.
ச.  சித்ரா

You might also like
4 Comments
  1. jayark says

    ennum ezhuthum kan ena thagum enbathai nirubitha sagodhararia! Arumai.
    Thodaravum un paniyinai

Comments are closed.